கந்தசஷ்டி விரதம்
வெற்றிவடிவேலன் அவனுடை வீரத்தினை புகழ்வோம்
சுற்றிநில்லாதேபோ பகையே துள்ளிவருகுதுவேல் – என்ற மஹாகவி பாரதியார் பாடியது போல் முருகன் என்றாலே நம் நினைவுக்கு வருவது வெற்றி தான்! அவன் வெற்றி வடிவேலன் என்றே போற்றப்படுகிறான்!
முருகப்பெருமான் அரக்கனை வெற்றிகொண்டு அவன் அகந்தையை அகற்றி அவனை தன்னுடனே வைத்துக்கொள்ள அருளிய நிகழ்வே கந்த சஷ்டி!
இந்த கந்த சஷ்டி விழாவானது ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான அனைத்து சைவ கோவில்களிலும் வெகுச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக எண்ணற்ற மக்கள் முருகனின் அருள் பெற இந்த கந்த சஷ்டி விரதத்தினை அனுசரிக்கின்றனர்.
அந்த கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாள் இன்று நாளை கந்தன் சூர பத்மனை அழித்து வெற்றி கொண்ட நாள்!
இவ்வாறாக மிகப் பிரசித்தமாகக் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விரதத்தைப் பற்றிய பல அரிய தகவல்களையும், வெவ்வேறு பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதைப் பற்றியும் திரு. ஆட்சிலிங்கம் அவர்கள் நமக்கு இங்கு எடுத்துரைக்க இருக்கிறார்.
நாமும் முருகனை வழிபட்டு வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவோம்!