திருச்செந்தூர் மகிமை
கந்த சஷ்டியின் ஆறாவது நாளான இன்று (13.11.2018) சூரனை வென்று வெற்றி வாகை சூடினான் கந்தன்!
தமிழகத்தில் இந்த நிகழ்வு பெரும்பாலான சைவ கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், முருகன், செந்தில் ஆண்டவனாக வீற்றிருக்கும் திருச்செந்தூரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சகணக்கான மக்கள் சூரசம்ஹார நிகழ்வினை காணவும், செந்தில் ஆண்டவனின் அருள் பெறவும் திருச்செந்தூரில் கூடுகின்றனர்.
எதனால் திருச்செந்தூருக்கு இவ்வளவு சிறப்பு? என்பதைப் பற்றியும், திருச்செந்தூர் ஸ்தல விஷேசங்கள் குறித்த பல அரிய விஷயங்களையும் நமக்காக திரு. ஆட்சிலிங்கம் ஸ்ரீ டிவியில் கூற இருக்கிறார்.
அனைவரும் தவறாமல் பாருங்கள்! மற்றவர்களுக்கும் பகிருங்கள்!
முருகன் அருளால் வாழ்வில் அனைத்து வெற்றிகளும் அடைய ஸ்ரீடிவி, நேயர்களுக்கு வாழ்த்தினை தெரிவிக்கிறது.