நேதாஜி வழியில் இராணுவத்தில் பெண்கள்
தேசத்தின் முதல் ஆயுதமேந்திய பெண்கள் ரெஜிமெண்ட், பாரதத்தின் நிறைவான பாரம்பரியங்கள் மீது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையின் வெளிப்பாடே ஆகும். அனைத்துவகையான எதிர்ப்புக்களையும் புறம் தள்ளிவிட்ட நேதாஜி அவர்கள், பெண்கள் படையினரின் சல்யூட்டைப் பெற்றார் என்று பிரதமர் மோடி அவர்கள் நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் 75வது ஆண்டு விழாவில், நேதாஜி எவ்வாறு பெண்களின் வீரத்தைப் போற்றினார் என்று நினைவு கூர்ந்து பேசினார்.