செய்திகள்… சிந்தனைகள்… – 18.07.2019
தினசரி செய்திகளை நேர்மையான சிந்தனைகளோடு தினந்தோறும் வழங்கி வருகிறது ஸ்ரீ டிவி.
இன்றைய செய்திகள்:
1. குல்பூஷன் யாதவின் மரணதண்டனை நிறுத் திவைப்பு. இந்த மரணதண்டனை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் – சர்வதேசநீதிமன்றம்.
2. மும்பை வெடிகுண்டு வழக்கின் முக்கியக் குற்றவாளி ஹபிஸ் சயித் கைது
3.பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் கீழ், கடந்த 10 மாதங்களில், 3 லட்சம் பயனாளிகளுக்கு 4405 கோடி மதிப்பிலான காப்பீட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
4. மரபுசாரா எரிசக்தி உற்பத்தி 80 கிகாவாட் அளவைத் தாண்டியுள்ளது என்று ராஜ்யசபாவில் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
5.குரான் வழங்கத் தீர்ப்பு வழங்கிய நீதிபதியைப் புறக்கணிக்க ராஞ்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அழைப்பு விடுத்ததிற்குப் பணிந்து நீதிபதி தீர்ப்பை விலக்கிக்கொண்டார்.
6. வைகோவின் ராஜ்யசபா எம்.பி பதவி ரத்து செய்யப்பட வேண்டும். இந்திய மொழிகளைக் கேவலப்படுத்திப் பேசுவது சட்டப்பிரிவு 351 இன் கீழ் குற்றம்- டாக்டர் சுப்பிரமணிய சுவாமி ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடுக்கு கடிதம்.
7. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அங்குலம் அங்குலமாக அலசி, நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என்று பாராளுமன்றத்தில் பேசியுள்ளார் அமித்ஷா…
8. என்.ஐ.ஏ கைது விவகாரத்தில் இருந்து முஸ்லீம் இளைஞர்களை காக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
9. அத்திவரதர் 17 நாட்களில் 20 லட்சம் பேர் தரிசனம்
10. துப்பாக்கி டான்ஸ் MLAvவிற்கு கல்தா
மேற்கண்ட செய்திகளை தேசிய கண்ணோட்டத்தில் பத்திரிக்கையாளர் திரு பால கௌதமன் அவர்களும் திரு. நவநீதன் அவர்களும் முன் வைக்கிறார்கள்.
சரியான செய்திகளை நேர்மையான கண்ணோட்டத்துடன் நாமும் தெரிந்து கொள்வோம்! நாடு நலம்பெற பலருக்கு பகிர்வோம்!
#குல்பூஷன்யாதவ்
#Kulbhushanyadhav
#NIA
#Jawahirullah
#அத்திவரதர்
#பிஜேபி
#ஜனஒளஷதி
#என்ஐஏ
#ஜவாஹிருல்லா