புண்ணிய பூமியில் இன்று… – 17.08.2019
இன்று பாரத அன்னையின் விடுதலைக்காக தன்னுயர் ஈந்த ஏராளமான மாவீரர்களில் ஒருவரான மதன் லால் திங்கராவின் நினைவு நாள். கிட்டதட்ட 119 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் ஆங்கிலேயன் கர்ஸான் வில்லியை சுட்டுக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்ட நாள். மதன் லால் திங்கரா சாகும் முன், “நான் கருணையை யாசிக்கப்போவதில்லை. உங்களுக்கு என் மீது எந்த அதிகாரமும் இல்லை. எப்படி ஜெர்மனி இங்கிலாந்தை ஆளமுடியாதோ அது போல பாரதத்தை இங்கிலாந்து ஆள முடியாது; கூடாது. நான் அன்று ஆங்கில இரத்தத்தை சிந்த வைத்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அது அடக்கத்துடன் நான் என் இந்திய தேசத்தின் தேசபக்த இளைஞர்களுக்கு தூக்குத் தண்டனைகளையும் நாடுகடத்தல் தண்டனைகளையும் அளித்து வந்தமைக்கான ஒரு எளிய பழிவாங்கும் முயற்சியே ஆகும். இந்த முயற்சியில் நான் என் மனசாட்சியைத் தவிர வேறு எவராலும் தூண்டப்படவில்லை என்பதனை சொல்லிக்கொள்கிறேன். நான் என் கடமையை செய்தேனே தவிர வேறு எவருடனும் சதியாலோசனை செய்யவில்லை.” என்று கூறிவிட்டு வீரமுடன் தண்டனையை ஏற்றுக்கொண்டார்..
அந்த மாவீரன் குறித்து திரு அரங்கநாதன் அவர்கள் கூறக் கேட்போம்.
#மதன்லால்திங்ரா #திங்கரா #MadhanlalDhingra