பாரத பூமியில் இன்று | Bharatha Bhumiyil Indru | 20.05.2021| ShreeTV |
மஹாராஷ்ட்ராவில் திலகர் மற்றும் அகர்கர் ஆகியோருடன் கேசரி என்ற மராத்திய பத்திரிகை வெளிவர காரணமானவரும், பூனாவில் தி நியூ இங்கிலீஷ் ஸ்கூல் அமைய காரணகர்த்தாவாகவும் விளங்கியவரும், பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக கனல் தெறிக்கும் பல கட்டுரைகளை எழுதிய ஆசிரியருமான விஷ்ணு சாஸ்திரி சிப்லூங்கர் பிறந்த தினம்.
பிபின் சந்திர பால் – லால்-பால்-பால் என்று அழைக்கப்பட்ட மும்மூர்த்திகளில் ஒருவரும் ( மற்ற இருவர் பால கங்காதர திலகர், லாலா லஜபத் ராய்) இம்மூவர்தான் சுயராச்சியம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே முதன் முதலில் ஏற்படுத்தியவர்கள். “புரட்சி எண்ணங்களின் தந்தை” என்று அழைக்கப்படும் பிபின் சந்திர பால் பாரத அன்னையின் பாதம் சேர்ந்த தினம்.