சிலம்பும் சிந்தனையும் – பாகம் 15.2 – கண்ணகியின் புற அழகைப் பாராட்டல் – 2
சிலப்பதிகாரத்தின் கடந்தப் பகுதிகளில் கோவலன் கண்ணகி திருமணம், புகார் நகரின் அழகு, கோவலன், கண்ணகி குடும்பத்தாரின் செல்வச் சிறப்பு போன்றவைகள் பார்த்தோம்.
கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் முடிந்து முதன்முறையாக இருவரும் தனிமையில் இருக்க, கோவலன் கண்ணகியைப் பார்த்து பேச தொடங்குகிறான். கோவலன் கண்ணகியைப் பார்த்து எப்படி பேசினான் என்பதை இளங்கோவடிகள் எடுத்துக்காட்டுகின்ற பகுதியை படிக்கும் காலத்தில், இளங்கோவடிகளின் வித்தகப் புலமையும், அவர் வார்த்தைகளை கொண்டுச் சேர்க்கும் பாங்கும் நாமே அந்த இன்பத்தை அனுபவிப்பது போல இருக்கிறது என்கிறார் தமிழாகரர் பேராசிரியர் சாமி தியாகராசன் அவர்கள்.
அந்த இன்பரசம் சொட்டும் அந்தப் பகுதியை இந்தக் காணொளியில் தமிழாகரர் சொல்ல நாமும் கேட்போம்.
#கண்ணகி
#கோவலன்
#சிலப்பதிகாரம்
#சிலம்பும்சிந்தனையும்
#Silapathigaram
#புகார்நகரம்
#இளங்கோவடிகள்