செய்திகள்… சிந்தனைகள்… – 07.08.2019
1. இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் மூத்த பா.ஜ.க. தலைவருமான திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி.
2. லோக்சபாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாவும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் ஜனாதிபதியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. ஜோதிராதிய்ய சிந்தியா, புவனேஸ்வர் கலீடா, மிலிந்த் தியோரா, பூபேந்தர் ஹுடா போன்ற மூத்த தலைவர்கள் காஷ்மீர் சிறப்பு அந்தஸத்து ரத்து செய்ததை வரவேற்றுள்ளனர்.
4. காஷ்மீர் இந்தியாவின் உள்ளடக்கிய பகுதியா? இதில் விதிமீறல் நடந்துள்ளது என்று லோக்சபாவில் சேம் சைட் கோல் அடித்த ஆதீர் ரஞ்சன் சவுத்ரி
5. காஷ்மீருக்காக உயிரையும் கொடுப்பேன் – அமித்ஷா உருக்கம்
6. லடாக் எம்.பி. ஜம்மியாங் செரிங் நாம்கியால் 370லினால் இவ்வளவு நாட்கள் இரண்டே குடும்பங்கள் தான் பயன்பெற்றன என்று கூறியுள்ளார்.
7. தயாநிதிமாறன், சுப்ரியா சுலே, சசிதரூர் ஆகியோர் பரூக் அப்துல்லா எங்கே அவையில் கேட்டனர்.
#சுஷ்மாஸ்வராஜ்
#காஷ்மீர்
#Article370
#அமித்ஷா
#ராகுல்காந்தி